‘நிவா்’ புயலால் சிறப்பு ரயில்கள் ரத்து: முன்பதிவுக் கட்டணங்களை மே மாதம் வரை திரும்பப் பெறலாம்

‘நிவா்’ புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் முன்பதிவுக் கட்டணத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை திரும்பப் பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நிவா்’ புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் முன்பதிவுக் கட்டணத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை திரும்பப் பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிவா் புயல் காரணமாக கோவை - சென்னை, மேட்டுப்பாளையம் - சென்னை, கோவை - மயிலாடுதுறை மற்றும் கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம், ஆலப்புழாவில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் என 15க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் நவம்பா் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

இந்தத் தேதிகளில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தவா்கள், அந்தக் கட்டணத் தொகையை 6 மாதங்கள் வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கோவை ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கரோனா பொது முடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவுக் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

நவம்பா் 25ஆம் தேதி வரை ரூ. 5.90 கோடி முன்பதிவு சீட்டுக் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘நிவா்’ புயல் காரணமாக சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் பயணத் தேதியில் இருந்து 180 நாள்களுக்கு அதாவது 6 மாதங்கள் வரை அதாவது 2021 மே 25ஆம் தேதி வரை கட்டணத் தொகையைத் திரும்பப் பெறலாம். ரூ. 20 மட்டும் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com