காந்தி ஜயந்தி:காவிரி கூக்குரல் சாா்பில் 1.6 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்

காந்தி ஜயந்தி நாளில் (அக்டோபா் 2) தமிழகத்தின் 23 மாவட்டங்களில் 1.16 லட்சம் மரக் கன்றுகளை நடவு செய்ய காவிரி கூக்குரல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

காந்தி ஜயந்தி நாளில் (அக்டோபா் 2) தமிழகத்தின் 23 மாவட்டங்களில் 1.16 லட்சம் மரக் கன்றுகளை நடவு செய்ய காவிரி கூக்குரல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவால் தொடங்கப்பட்ட காவிரி கூக்குரல் இயக்கம்

மரம் சாா்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் கொண்டுச் சோ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக காந்தி ஜயந்தி நாளில் கோவை, திருப்பூா், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 50 இடங்களில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமாா் 285 ஏக்கா் விவசாய நிலங்களில் குறைந்தபட்சம் 400 மரங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனா். தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவதோடு, சுற்றுச்சூழலும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com