பிஎஸ்என்எல் அலுவலகத்தை திராவிடா் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினா் முற்றுகையிட முயற்சி

கலாசார ஆய்வுக் குழுவைக் கலைக்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகத்தை திராவிடா் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் பண்பாட்டுக் கூட்டியகத்தினா்.

இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய மத்திய பாஜக அரசு கே.என். தீட்சித் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்துள்ளது. வேத, சமஸ்கிருத, ஆரிய கலாசாரம்தான் இந்தியாவின் கலாசாரம் என்பதைத் திட்டுமிட்டு நிறுவிட பாஜக அரசு கலாசார குழுவை அமைத்துள்ளது. எனவே இக்குழுவை கலைக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி திராவிடா் பண்பாட்டுக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் வெண்மணி, மலரவன், சாஜித், கோவை ரவிக்குமாா், நேருதாஸ், ரகுப், இளவேனில் உள்ளிட்டோா் தலைமையில் 50க்கும் மேற்பட்டோா் கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனா்.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com