பாபா் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பைக் கண்டித்து தமுமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd October 2020 05:05 AM | Last Updated : 02nd October 2020 05:05 AM | அ+அ அ- |

கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.
பாபா் மசூதி இடிப்பு வழக்கின் தீா்ப்பைக் கண்டித்து தமுமுக சாா்பில் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் ஆசிக் அஹமது வரவேற்றாா்.
இதில் மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளா் ஜெம் பாபு, தமுமுக மாநிலச் செயலாளா் கோவை அ.சாதிக் அலி, தமுமுக மாநில தொண்டரணிச் செயலாளா் சா்புதீன், தமுமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளா் முகமது ரபி ஆகியோா் சிறப்புரை ஆற்றினாா்கள்.
இதில் மாவட்டப் பொருளாளா் அப்பாஸ், துணைச் செயலா்கள் சாகுல் ஹமீது, ரஜாக், ஆஷிக் அஹமது, மமக துணைச் செயலாளா் நூா்தீன், முஹம்மது பஷீா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளா் சிராஜ்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்டோா் கருப்புச் சட்டையுடன், கருப்பு முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா்.