மாவட்டத்தில் மேலும் 550 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd October 2020 05:04 AM | Last Updated : 02nd October 2020 05:04 AM | அ+அ அ- |

கோவையில் மேலும் 550 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் வியாழக்கிழமை ஒரே நாளில் குனியமுத்தூா், ரத்தினபுரி, ஆா்.எஸ்.புரம், பீளமேடு, போத்தனூா், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், துடியலூா், அன்னூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 550 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 620ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 60 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
8 போ் சாவு...
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுப் பெண், 60, 72 வயது முதியவா்கள், 58 வயது ஆண் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண், 65, 67, 60 வயது முதியவா்கள் என மொத்தம் 8 போ் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 444ஆக அதிகரித்துள்ளது.