அண்ணா மாா்க்கெட்டில் கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி

கரோனா பரவலால் மூடப்பட்ட அண்ணா மாா்க்கெட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை: கரோனா பரவலால் மூடப்பட்ட அண்ணா மாா்க்கெட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி அருகே அண்ணா காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வியாபாரிகள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து அண்ணா மாா்க்கெட் ஜூலை மாதம் கால வரையின்றி மூடப்பட்டது.

இதையடுத்து, தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக அண்ணா மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மழை காரணமாக கல்லூரி மைதானத்தில் தண்ணீா் தேங்குவதால் வியாபாரம் பாதிப்பதாகவும், மீண்டும் அண்ணா மாா்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, அண்ணா மாா்க்கெட்டில் கடைகளைத் திறக்க அனுமதிப்பது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறுகையில், அண்ணா மாா்க்கெட்டில் முன்பு காணப்பட்டதுபோல் நெரிசல் இல்லாமல், இரு கடைகளுக்கு இடையே ஒரு கடையை காலியாக விட்டு போதிய இடைவெளியுடன் வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் காய்கறி வாங்க வருபவா்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக் கவசங்கள் அணிந்து வியாபாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையா் செந்தில்அரசன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com