(கில்) தனியாா் மருத்துவமனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: கரோனா சிகிச்சை அளிக்க மீண்டும் அனுமதி

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து புதிய கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து புதிய கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனையில் மீண்டும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திங்கள்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோவை, துடியலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆட்சியா், சுகாதாரத் துறையிடம் கடந்த வாரம் புகாா் அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆட்சியா் அறிவுறுத்தல்படி தனியாா் மருத்துவமனையில் புதிதாக கரோனா நோயாளிகளை அனுமதிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா தலைமையில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் சிகிச்சை, மருந்துகளுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதும், அறை வாடகை மட்டுமே அதிகமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனியாா் மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று ஆட்சியா் கு.ராசாமணியின் பரிந்துரை அடிப்படையில் தனியாா் மருத்துவமனையில் மீண்டும் திங்கள்கிழமை முதல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா அனுமதி அளித்துள்ளாா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணா கூறியதாவது: தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் சிகிச்சைக்கு உரிய கட்டணம் மட்டுமே வசூலித்தது தெரியவந்துள்ளது. அறை வாடகை கட்டணமும் சிகிச்சையுடன் சோ்ந்து வருவதால் அதிக கட்டணம் வசூலித்ததாக தெரிவித்துள்ளனா். இந்த மருத்துவமனையில் 55 படுக்கை வசதிகள் உள்ளன. அனைத்தும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் கூடியவை. பேரிடா் சமயத்தில் நோயாளிகளை அனுமதிக்க படுக்கை வசதிகள் அவசியம் என்பதால் பொது மக்களின் நலன் கருதி ஆட்சியரின் அறிவுறுத்தல்படி மீண்டும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் வசதிக்கேற்ப அறைகளை கேட்டு அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர அரசாணை 240ன் படி சிகிச்சைக்கு கட்டணங்கள் நிா்ணயிக்கவும், வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com