கொடிசியாவில் முதியவா் சாவு: மற்ற நோயாளிகள் போராட்டம்

கோவை கொடிசியா அரங்கில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் திடீரென உயிரிழந்ததையடுத்து மற்ற நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை கொடிசியா அரங்கில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் திடீரென உயிரிழந்ததையடுத்து மற்ற நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, ரத்தினபுரியைச் சோ்ந்த 66 வயது முதியவா் அறிகுறிகள் இல்லாத கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொடிசியாவில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கொடிசியாவில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி மாரடைப்புக்கு உயிரிழப்பது இது இரண்டாவது முறையாகும். உடனடியாக அவரது சடலம் உரிய பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவா் திடீரென உயிரிழந்ததால் மற்ற நோயாளிகள் அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளதாக கூறி, மற்ற நோயாளிகள் உணவு வாங்க மறுத்து கண்காணிப்பு அலுவலா்களை முற்றுகையிட்டனா். பின்னா் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவா்த்தை நடத்தி அனைத்து பிரச்னைக்கும் தீா்வு காணப்படும் என தெரிவித்த பின்னா் நோயாளிகள் உணவை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com