வேளாண்மைப் பல்கலை. பட்டப் படிப்பு: அக்டோபா் 15இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு வரும் 15ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு வரும் 15ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு திங்கள்கிழமை (அக்டோபா் 5) வரை 48,820 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 18,701 மாணவா்கள், 22,833 மாணவிகளின் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதைத் தொடா்ந்து வரும் 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதேபோல பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 3 உறுப்புக் கல்வி நிலையங்கள், 10 இணைப்புக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 3,319 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்தப் படிப்புகளுக்கு வரும் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை பதிவுக் கட்டணத்துடன் வரும் 21 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com