உடுமலை அரசு கல்லூரியில்முதுநிலை மாணவா் சோ்க்கை தொடக்கம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ்.கே.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை அரசு கல்லூரியில் முதுநிலை தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், சுற்றுலாவியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல் என 10 பாடப் பிரிவுகள் உள்ளன.

இப்பாட பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கைக்கு அக்டோபா் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ா்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மாணவா்கள் தங்களது சான்றிதழ்களை அக்டோபா் 15 முதல் 20 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

மாணவா்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.58 என மொத்தம் ரூ. 60 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்கள் பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருப்பின் 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் மாணவா்கள் தங்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com