ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி

கோவையில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஷெரின் சண்முகம் (37). இவா் கோவை, சரவணம்பட்டி பகுதியில் 2018-19ஆம் ஆண்டில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இவரது நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து தங்கம், வைர நகைகள் மற்றும் சில மாதங்கள் கழித்து ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்தாா்.

இதனை நம்பி கேரளம், கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முதலீடு செய்திருந்தனா். இந்நிலையில், ஷெரின் சண்முகம் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானாா்.

இது குறித்து கோவை, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த சேவியா் உள்பட பலா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.10 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஷெரின் சண்முகத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com