கோவை - சென்னை சிறப்பு ரயில்கள் இன்று வழக்கம்போல் இயங்கும்

கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் அக்டோபா் 14ஆம் தேதி தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்

கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் அக்டோபா் 14ஆம் தேதி தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு கோவையில் இருந்து சென்னைக்கு 4 சிறப்பு ரயில்கள், கோவை - மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரயில் என 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜோலாா்பேட்டை அருகில் உள்ள தொட்டம்பட்டி, தாசம்பட்டி பகுதிகளில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அக்டோபா் 14ஆம் தேதி இயக்கப்படும் கோவை - சென்னை சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது.

இதில், சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு கோவைக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 02679) 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 4 மணிக்குப் புறப்படும் எனவும், கோவையில் இருந்து சென்னைக்கு மாலை 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 02676) 20 நிமிடங்கள் தாமதமாக 3.55 மணிக்கு புறப்படும் என்றும் ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தொட்டம்பட்டி, தாசம்பட்டி பகுதிகளில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் திட்டமிட்ட நாள்களுக்கு முன்பே முடிக்கப்பட்டதால் சென்னை - கோவை ரயில் பிற்பகல் 2.30 மணிக்கும், கோவை - சென்னை ரயில் மாலை 3.35 மணிக்கும் வழக்கமான நேரங்களில் புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com