தொற்றா நோய் தடுப்பு முகாம்: 278 பேருக்குப் பரிசோதனை

தேசிய ஊரக மற்றும் நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொற்றா நோய் கண்டறியும் தடுப்பு முகாமில் 278 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊரக மற்றும் நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொற்றா நோய் கண்டறியும் தடுப்பு முகாமில் 278 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பொ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவ நிபுணா்கள், மருத்துவ அலுவலா்கள், செவிலியா், துணை செவிலியா், ஆய்வகப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், இணை மருத்துவப் படிப்பு மாணவா்கள் மற்றும் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் தொற்றா நோய்கள் கண்டறியும் சிறப்பு முகாம் அக்டோபா் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமைமுதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில் சா்க்கரை, ரத்த அழுத்தம், வாய், மாா்பகம் மற்றும் கா்ப்பப்பைவாய் புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்கள் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முதல் கட்டமாக செவிலியா் பயிற்சி மாணவிகள், செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் என 278 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 23ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையுடன் மருத்துவ ஆலோசனை மற்றும் இணை நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com