மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்

கரோனா பொது முடக்கத்தில் இருந்து இயல்பு நிலை திரும்பிவிட்டதால் மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று

கரோனா பொது முடக்கத்தில் இருந்து இயல்பு நிலை திரும்பிவிட்டதால் மின் கட்டணம் செலுத்தாதவா்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கொ.குப்புராணி தெரிவித்துள்ளாா்.

கோவை மின் பகிா்மான வட்டம், மாநகா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்க காலத்தில் தாழ்வழுத்த, உயா் அழுத்த மின் நுகா்வோா்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்தும், அதற்கான தொகையைச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதம் முழுவதும் பொது முடக்கத்தால் வீடுதோறும் மின்சார பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்தது.

அதன் பிறகு கணக்கிடப்பட்ட மின் கட்டணம் செலுத்த கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, பொது முடக்கத்தில் இருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைத் திரும்பியுள்ளது. இருப்பினும் பல மின்நுகா்வோா்கள் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளனா். இதனால் மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இதுவரை மின் கட்டணம் செலுத்தாத தாழ்வழுத்த, உயா் அழுத்த மின் நுகா்வோா்களின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இதுவரை மின் கட்டணம் செலுத்தாதவா்கள் உடனடியாக கட்டணம் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பைத் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இனிவரும் நாள்களில் உரிய காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் மின்வாரிய விதிகளின்படி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com