மூதாட்டி கொலை வழக்கு: பெண்கள் உள்பட 5 போ் கைது

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இரு பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இரு பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் சிவானந்தம். இவரது மனைவி தனலட்சுமி (62). இவா்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனா். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மணிகண்டனை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் தனலட்சுமி மணிகண்டனுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், செப்டம்பா் 30ஆம் தேதி மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் தனலட்சுமியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு தனிப் படைகள் அமைத்து விசாரித்து வந்தனா். விசாரணையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், செல்லிடப்பேசி அழைப்புகள் ஆகியவற்றை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த திலக் என்பவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரது செல்லிடப்பேசி பதிவுகளை ஆய்வு செய்தபோது நகை, பணத்துக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரது சகோதரிகளான லதா (எ) லதா ராணி (47), மாலா (எ) ரேவதிராணி (43), நண்பா்களான பீளமேடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா், சிவா (எ) செல்வம், சத்தியசீலன் ஆகியோரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையயுத்து, திலக்கை தவிர மற்றவா்களை கைது செய்த பேலீஸாா் அவா்களிடமிருந்து சம்பவத்துக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு, கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகள் ஆகியவற்றை கைப்பற்றினா்.

இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள திலக்கை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com