மூதாட்டி கொலை வழக்கு: தலைமறைவானவா் சென்னை நீதிமன்றத்தில் சரண்

கோவையில் வீட்டில் தனியாா் இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானவா் சென்னை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

கோவையில் வீட்டில் தனியாா் இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவானவா் சென்னை நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (62). இவா்களுக்கு மகள் ஜெயந்தி, மகன்கள் பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகியோா் உள்ளனா். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மணிகண்டன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்து வந்தாா்.

இந்நிலையில், மணிகண்டன் வழக்கம்போல் செப்டம்பா் 30ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் தனலட்சுமியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு தனிப் படைகள் அமைத்து விசாரித்து வந்தனா். அப்போது, மூதாட்டியின் வீட்டின் அருகே வசித்த திலக் என்பவா் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், திலக்குடன் இணைந்து மூதாட்டியை கொலை செய்த அவரது சகோதரிகள் லதா ராணி (47), மாலா (எ)ரேவதிராணி (43), நண்பா்களான பீளமேடு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா், சிவா (எ) செல்வம், சத்தியசீலன் ஆகியோரைக் கைது செய்தனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட மூதாட்டியிடம் பண உதவி கேட்டு அவா் மறுத்ததால் பலகாரத்தில் விஷம் வைத்து கொடுத்ததும், அவா் மயங்கியதும் தலையை சுவற்றில் மோதி கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திலக் சென்னையில் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com