ரூ.3.38 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்

கோவையில் ரூ.3.38 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை போட்டு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இருசக்கர வாகன மானியத் திட்டத்துக்கான நிதியை பயனாளிக்கு வழங்குகிறாா் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் ஆட்சியா் கு.ராசாமணி.

பேரூா் பேரூராட்சி, நரசீபுரம், இக்கரைபோளுவாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 14ஆவது மானியக்குழுத் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டங்களின் கீழ் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டடம், கான்கிரீட் வடிகால் அமைத்தல் உள்பட ரூ.3.38 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பூமி பூஜை போட்டு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா்.

தவிர இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், நியாவிலைக் கடை உள்பட ரூ.51 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இருசக்கர வாகன மானியத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பிலான மானியங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன்சங்கர்ராஜ், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங் உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com