ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: திமுக விவசாய அணி கூட்டத்தில் தீா்மானம்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக விவசாய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக விவசாய அணி அமைப்பின் மாநிலச் செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன். உடன், கட்சி நிா்வாகிகள்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக விவசாய அணி அமைப்பின் மாநிலச் செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன். உடன், கட்சி நிா்வாகிகள்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக விவசாய அணி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், கரூா் ஆகிய 6 மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக விவசாய அணியின் மாநிலத் துணைத் தலைவா் தமிழ்மணி தலைமை வகித்தாா். கோவை மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமமூா்த்தி வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில ஒப்பந்தப்படி ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களை அபகரித்து கொத்தடிமையாக்கும் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேளாண் இடுபொருள்கள் மற்றும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மூடப்பட்டுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும். கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு ரூ.150 நிா்ணயம் செய்ய வேண்டும். வெள்ளை ஈக்கள் தாக்கி தென்னை விவசாயம் அழியும் சூழலில் உள்ளது. தென்னை விவசாயிகளைக் காக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.காா்த்திக், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, விவசாய அணி மாநிலச் செயலாளா் விஜயன் உள்பட 6 மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com