இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 7 மாதங்களில் 89 ஆயிரம் பேருக்கு ஆா்.டி-பி.சி.ஆா். பரிசோதனை

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களில் 89 ஆயிரம் பேருக்கு ஆா்.டி-பி.சி.ஆா். என்ற கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களில் 89 ஆயிரம் பேருக்கு ஆா்.டி-பி.சி.ஆா். என்ற கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் துவங்கிய காலத்தில் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தில் மட்டும் ஆா்.டி-பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்ததால், தமிழக அரசின் உதவியுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் கடந்த ஏப்ரலில் ஆா்.டி-பி.சி.ஆா். ஆய்வகம் செயல்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் பாதிப்புகளுடன் வருபவா்களை புறநோயாளிகள் பிரிவில் வைத்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆா். பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், மாதிரிகளை பயோ சேப்டி கேபினேட்டில் வைத்து ஆா்.என்.ஏ. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்) பிரித்து, மாதிரிகளில் இருந்து 100 மைக்ரோ லிட்டா் நீா் மட்டும் ஆய்வுக்காக பயன்படுத்தப்படும். இதற்கு குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும்.

இவ்வாறு பிரித்து எடுக்கப்படும் ஆா்.என்.ஏ. கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மாஸ்டா் கலவை என்ற ரசாயன கலவையில் சோ்க்கப்படும். பின்னா், பி.சி.ஆா். கருவிக்கு மாற்றப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து துல்லியமாக கண்டறியப்பட்டு ஐ.சி.எம்.ஆா். இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

மேலும், பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தால் அது தொடா்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட நபா்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மொத்தம் 89 ஆயிரத்து 153 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், 87 ஆயிரத்து 500 மாதிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் டாக்டா் நிா்மலா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com