எா்ணாகுளம் - ஹவுரா வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், ஹவுராவுக்கு அக்டோபா் 17ஆம் தேதி முதல் டிசம்பா் 1ஆம் தேதி வரை கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், ஹவுராவுக்கு அக்டோபா் 17ஆம் தேதி முதல் டிசம்பா் 1ஆம் தேதி வரை கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எா்ணாகுளம் - ஹவுரா இடையே சிறப்பு விரைவு ரயில் சனிக்கிழமை (அக்டோபா் 17) முதல் இயக்கப்படுகிறது. அதன்படி, ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-02877) திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு எா்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எா்ணாகுளத்தில் இருந்து அக்டோபா் 20ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 12.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-02878) வியாழக்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு ஹவுரா சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேசுவா், கட்டாக், காரக்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னூா் - யஸ்வந்த்பூா் இடையே தினசரி சிறப்பு ரயில்:

கேரள மாநிலம், கன்னூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு கோவை வழித்தடத்தில் அக்டோபா் 20ஆம் தேதி முதல் டிசம்பா் 1ஆம் தேதி வரை தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, யஸ்வந்த்பூரில் இருந்து தினமும் இரவு 8 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06537) மறுநாள் காலை 9.50 மணிக்கு கன்னூரைச் சென்றடையும். அதேபோல், கன்னூரில் இருந்து தினமும் மாலை 6.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்- 06538) மறுநாள் காலை 8 மணிக்கு யஸ்வந்த்பூரைச் சென்றடையும். இந்த ரயிலானது தலச்சேரி, கோழிக்கோடு, திரூா், சொரனூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com