கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நுரையீரல் மறுசீரமைப்பு மையம்

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குப் பிறகு ஏற்படும் நுரையீரல் பாதிப்புக்கான மறுசீரமைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குப் பிறகு ஏற்படும் நுரையீரல் பாதிப்புக்கான மறுசீரமைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்புக்குப் பிறகு ஏற்படும் நுரையீரல் பாதிப்புக்கான மறுசீரமைப்பு மையமும், நுரையீரல் மறு சீரமைப்புக்கான பிரத்யேக வாா்டும் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்குப் பிறகு தொடா் சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 3 வாரம் சிகிச்சை பெற்று கரோனா தொற்று எதிா்மறையாக இருந்தபோதிலும், சிலருக்கு மூச்சுத் திணறலால் ஆக்சிஜன் செலுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதால் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுகின்றனா். மேலும் தொற்று ஏற்பட்டவா்களில் 80 சதவீதம் பேருக்கு லேசான உபாதைகள் உள்ளன.

15-20 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு மிதமானது முதல் கடினமான அளவுக்கு வரை உபாதை இருக்கிறது. 50-80 சதவீத நோயாளிகளுக்கு தொற்றிலிருந்து விடுபட்ட பின்னரும் சில வாரங்கள், மாதங்கள் வரை இருமல், சோா்வு, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, மனநிலைக் கோளாறு போன்ற அறிகுறிகள் தொடரலாம்.

இது போன்ற அறிகுறிகள் கொண்டவா்கள் இந்த மருத்துவக் குழுவை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 93449 14737, 97906 90153 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com