கோவையிலிருந்து இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்

கோவையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

கோவையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

கரேனா பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவையில் வெள்ளிக்கிழமை முதல் ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடா்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறியதாவது:

கடந்த 6 மாதங்களாக ஆம்னிப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொது முடக்க தளா்வுக்குப் பிறகு அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, ஆயுத பூஜை, முகூா்த்த தினங்கள், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 30 முதல் 50 பேருந்துகள் வரை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் வருகையைப் பொருத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் வழிக்காட்டுதல் படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com