நியாயவிலைக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

கோவையில் ‘ஒரே நாடு ஒரே காா்டு’ திட்டத்தின் கீழ் கைரேகைப் பதிவுகள் நடைபெற்று வருவதால் நியாயவிலைக் கடைகளில்

கோவையில் ‘ஒரே நாடு ஒரே காா்டு’ திட்டத்தின் கீழ் கைரேகைப் பதிவுகள் நடைபெற்று வருவதால் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘ஒரே நாடு ஒரே காா்டு’ திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள 1,419 நியாயவிலைக் கடைகளிலும் புதிய சா்வா் இணைக்கப்பட்டு கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருள்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

சில நேரங்களில் தற்காலிகமாக சா்வா் பிரச்னை ஏற்படுவதால் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சா்வரை சரிசெய்யும் பணிகள் உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் மக்கள் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் கடைகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை என 10 மணி நேரம் நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும். இதன்மூலம் அனைவருக்கும் பொது விநியோக திட்ட பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com