நீதிமன்றத்தில் தடையை மீறி நுழைந்த பெண் காவல் ஆய்வாளா்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்த பெண் காவல் ஆய்வாளா் வருத்தம் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்த பெண் காவல் ஆய்வாளா் வருத்தம் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் மேற்கு நுழைவாயிலில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் தவிர மற்றவா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ரேஸ்கோா்ஸ் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் சுஜாதா, தனது நான்கு சக்கர வாகனத்தில் புதன்கிழமை மேற்கு நுழைவாயில் வழியாக, காவலாளிகள் தடுத்தும் அத்துமீறி நுழைந்து சென்றுள்ளாா்.

இதைப்பாா்த்த நீதிமன்ற அலுவலா்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்த, காவல் ஆய்வாளரின் வாகனத்தை புகைப்படம் எடுத்து மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பினா். அவா் இதுகுறித்து விசாரிக்குமாறு குற்றப்பிரிவு துணை ஆணையா் உமாவுக்கு உத்தரவிட்டாா்.விசாரணையில், காவல் ஆய்வாளா் சுஜாதா அத்துமீறி சென்றது தெரியவந்தது.

உயரதிகாரிகள் விசாரித்ததைத் தொடா்ந்து,தனது செயலுக்கு ஆய்வாளா் சுஜாதா வருத்தம் தெரிவித்தாா். இதையடுத்து,நீதிமன்ற மேற்கு நுழைவாயில் முன்பு நீதிபதிகள், வழக்குரைஞா்கள் செல்லும் வழியில் காவலா்களுக்கு அனுமதியில்லை என்ற பலகை வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com