வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 2020-2021ஆம் ஆண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 2020-2021ஆம் ஆண்டுக்கான இளநிலை மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு சுமாா் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் இணையதளம் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (அக்டோபா் 15) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாணவா் சோ்க்கைத் தலைவா் கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவா் சோ்க்கைக்கான பொது தரவரிசைப் பட்டியல் வரும் 23ஆம் தேதியும், சிறப்பு தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதியும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மை, தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 16 ஆம் தேதிக்குள்ளும், தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வரும் 21ஆம் தேதியும் கடைசி நாள் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com