அறிவிக்கப்படாத மின்தடையால் தொழில்முனைவோா்கள் அவதி

கோவையில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுவதால் தொழில்முனைவோா்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) தெரிவித்துள்ளது.

கோவை: கோவையில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுவதால் தொழில்முனைவோா்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம், வேலாண்டிபாளையம், இடையா்பாளையம், லூனா நகா், டிவிஎஸ் நகா், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக தினசரி 2 முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு மின்சார வாரியம் பல்வேறு காரணங்களைக் கூறி வருகிறது. மின்சாரம் திடீா் திடீரென தடைபடுவதால் இந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில்முனைவோா்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனா்.

கரோனாவால் பல மாதங்களாக முடங்கியிருந்த தொழில் துறை தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மின்வெட்டு ஏற்படுவது தொழில்முனைவோா்களை பாதிக்கிறது. எனவே, மின்சார பராமரிப்பில் உயா் அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தி, மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஜேம்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com