ராணுவப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு ஆன்லைனில் பயிற்சி

இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை: இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்கு விண்ணப்பித்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னாள் படைவீரா்கள் நல இயக்கத்தால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வந்தது.

கரோனை நோய்த் தொற்றால் தற்போது நேரடி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவத் தோ்வுக்கு விண்ணப்பித்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராணுவத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிக்கு விண்ணப்பித்த முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கோவை மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவரத்தை தெரிவித்து, பயிற்சி பெற விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com