முன்னாள் படை வீரா்களுக்கு இடஒதுக்கீடு:பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வில் இடஒதுக்கீடு கோரும் முன்னாள் படை வீரா்கள், மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வில் இடஒதுக்கீடு கோரும் முன்னாள் படை வீரா்கள், மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகியப் பணியிடங்களுக்குத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வு மூலம் 7 ஆயிரத்து 800 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதில் முன்னாள் படை வீரா்களுக்கு 5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 390 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்விச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிலிருந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பா் 17ஆம் தேதிக்குப் பின்னா் 3 ஆண்டுகளுக்குள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். இணையதளத்தில் அக்டோபா் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தோ்வுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரும் முன்னாள் படை வீரா்கள் தங்களது பெயரினை மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com