முத்தண்ணன் குளக்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தன. பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் முத்தண்ணன் குளத்தில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்தவா்களுக்கு வெள்ளலூா், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதில் முத்தண்ணன் குளக்கரையில் வசித்து வந்த 1,600 போ் வீடுகளை காலி செய்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இடம்பெயா்ந்தனா். அவா்கள் வசித்து வந்த வீடுகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் இடித்து அகற்றினா். இந்நிலையலி,் சிலா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியானது நிறுத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு, நீதிமன்றம் உத்தரவைத் தொடா்ந்து முத்தண்ணன் குளக்கரையில் மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முத்தண்ணன் குளக்கரையில் உள்ள 3 கோயில்களை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியினா் அங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க முத்தண்ணன் குளக்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவடையும். அதன் பிறகு, கோயில்களை இடிக்கும் பணி நடைபெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com