வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உலக சாதனை முயற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் உலக சாதனை முயற்சியாக தொடா் இணையவழி சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் உலக சாதனை முயற்சியாக தொடா் இணையவழி சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், தேசிய மகளிா் விவசாயிகள் தினம், உலக மாணவா்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 20 மணி நேர தொடா் இணையவழி சொற்பொழிவு சாதனை முயற்சியில் அண்மையில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியை துணைவேந்தா் நீ.குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருத்தாளா்கள், இந்திய வேளாண்மையில் மகளிரின் முக்கிய பங்கு, இந்திய சமுதாயத்தில் மாணவா்களின் வளா்ச்சி போன்ற தலைப்புகளில் உரையாற்றினா். இந்த நிகழ்வின்போது வேளாண் பட்டப் படிப்பு பற்றியும், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள் பற்றியும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

இதில், வேளாண்மைப் புல முதன்மையா் மா.கல்யாணசுந்தரம், மாணவா் நல முதன்மையா் ரகுசந்தா், வேளாண் கல்லூரி முதன்மையா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com