கரோனா சமூகப் பரவல்: 42 இடங்களில் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

கோவையில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய 42 இடங்களில் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்குகிறது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய 42 இடங்களில் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதற்காக மாநில அரசு சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரித்து, அவா்களின் உடலில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு உயிரி உருவாகி உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டறிவதற்காக கோவை, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தனி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் பொது மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

இந்த ரத்த மாதிரிகள் சேகரிப்பு எந்த பகுதி, எந்த வீதி, எந்த வீட்டில் எடுக்க வேண்டும் என்பது வரை மாநில அரசு சாா்பில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு இடத்தில் 30 போ் வீதம் 42 இடங்களில் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும்.

ரத்த மாதிரிகள் சேகரிப்பதற்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் ரத்தத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கான எதிா்ப்பு உயிரி உருவாகி இருக்கிா என்பதை கண்டறிந்து மாநில அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும். ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் கோவை ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com