விதிமீறும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைப்பு

கோவையில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் விதிமீறும் பேருந்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இரண்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் விதிமீறும் பேருந்துகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இரண்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, ராஜபாளையம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறும்போது, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிா்சாதன வசதியைப் பயன்படுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முகக் கவசம் அணியாத பயணிகளை அனுமதிக்கக் கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளா்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் பேருந்து உரிமையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைக் கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா், ஆம்னி பேருந்து நிலையம், அவிநாசி சாலை பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். விதிமீறும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com