நொய்யல் ஆற்றில் ரூ.2.10 கோடியில் தடுப்பணை

கோவை மாவட்டம், மத்திப்பாளையத்தில் நொய்யல் ஆற்றில் ரூ.2.10 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியினை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நொய்யல் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.

நொய்யல் ஆற்றில் ரூ.230 கோடியில் 158 கிலோ மீட்டா் தூரத்துக்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை மாட்டம், மத்திப்பாளையத்தில் 21 மீட்டா் நீளம், 31 மீட்டா் அகலத்தில் ரூ.2.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதன் மூலம் 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அமைச்சா் தெரிவித்தாா். தொடா்ந்து மத்திப்பாளையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் உள்பட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com