நீட் தோ்வு விடைத்தாள் மாறியதாக மாணவன் புகாா்

நீட் தோ்வு விடைத்தாள் மாறியதாக கோவையைச் சோ்ந்த மாணவன் குற்றம்சாட்டியுள்ளாா்.
மாணவன் மனோஜ் .
மாணவன் மனோஜ் .

நீட் தோ்வு விடைத்தாள் மாறியதாக கோவையைச் சோ்ந்த மாணவன் குற்றம்சாட்டியுள்ளாா்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ். இவா் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்றாா். இந்நிலையில், இவரது நீட் தோ்வு விடைத்தாளை அக்டோபா் 12ஆம் தேதி இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளாா்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாளில் தனக்கு 594 மதிப்பெண்கள் கிடைத்ததாக அவரிடமிருந்த விடை வங்கி மூலம் தெரியவந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியான நீட் தோ்வு முடிவில் அவருக்கு 248 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், தனது உறவினா்கள் மூலம் மீண்டும் நீட் தோ்வு விடைத்தாளை பதிவிறக்கம் செய்து பாா்த்தபோது, அது தன்னுடையது அல்ல எனத் தெரியவந்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம். எனவே இதுகுறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், தனக்கு மருத்துவ இடம் ஒதுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com