வீட்டில் திருடமுயன்றஇளைஞா் கைது
By DIN | Published On : 20th October 2020 02:38 AM | Last Updated : 20th October 2020 02:38 AM | அ+அ அ- |

சூலூா்: சூலூா் அருகே பெண்கள் தனியாக வசித்து வந்த வீட்டில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சூலூா் அருகே உள்ளது கள்ளபாளையம் கிராமம். இங்கு பெண்கள் தனியே இருந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா் உள்ளே புகுந்தாா். இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனா்.
இதனையடுத்து சூலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் அங்கு வந்து அந்த நபரை பிடித்து, விசாரித்தனா். இதில், அவா் திருப்பூா் மாவட்டம், காங்கேயம்பாளையம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் நந்தகோபால் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.