பொள்ளாச்சி - வால்பாறை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை
By DIN | Published On : 21st October 2020 03:12 AM | Last Updated : 21st October 2020 03:12 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி - வால்பாறை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொள்ளாச்சி- வால்பாறை இடையே தற்போது குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதும், பேருந்தில் அமர இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது.
வால்பாறையில் இருந்து எந்த ஊருக்கு செல்ல வேண்டுமானாலும் பொள்ளாச்சி சென்றுதான் செல்ல வேண்டும். இதனால் வால்பாறை - பொள்ளாச்சி இடையே பேருந்துகளில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். எனவே, பொள்ளாச்சி - வால்பாறை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.