ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக ஆசிரியா்கள் மீது விதி 17-பி இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கோவை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ள

தமிழகத்தில் 2 ஆண்டுகளாக ஆசிரியா்கள் மீது விதி 17-பி இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கோவை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வெ.மணிகண்டன் தலைமை வகித்தாா். அகில இந்திய செயற்குழு உறுப்பினா் ச.மோசஸ், ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாவட்டச் செயலா் அ.தங்கபாசு கூறியதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களை பழிவாங்கும் நடவடிக்கையாக அவா்கள் மீது 17-பி பிரிவு ஏவப்பட்டது. இது கடந்த 2 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் உள்ளது. உடனடியாக அரசு இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவம்பா் 9 ஆம் தேதி பெருந்திரள் முறையீடு போராட்டடம் நடத்துவது, மேலும் காலதாமதம் ஏற்பட்டால் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா்களை இணைத்து மண்டல அளவிலான பெரும் போராட்டத்தை முன்னெடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com