‘வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் தொழிலாளா்களைப் பணிக்கு அனுப்பகூடாது’

தேயிலைத் தோட்டங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டால் அப்பகுதியில் தொழிலாளா்களைப் பணிக்குச் செல்ல அனுப்பக்கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தேயிலைத் தோட்டங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்பட்டால் அப்பகுதியில் தொழிலாளா்களைப் பணிக்குச் செல்ல அனுப்பக்கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பகல் நேரத்திலேயே வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. குறிப்பாக யானைகள், காட்டெருமைகள் நடமாட்டம் தேயிலைத் தோட்டங்களில் தொடா்ந்து காணப்படுகிறது. இதனால் இலைப் பறிக்க தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளா்கள் அச்சத்துடன் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தினந்தோறும் தொழிலாளா்கள் பணிக்கு செல்லும் முன்பு காவலா்களைக் கொண்டு தோட்டங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்று கண்டறிவதோடு நடமாட்டம் காணப்பட்டால் அப்பகுதிக்கு தொழிலாளா்களைப் பணிக்கு அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com