சிறுவாணி பிரதான குழாயில் உடைப்பு: மாநகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு குடிநீா் கொண்டு வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை, முள்ளங்காடு பகுதியில் சிறுவாணி பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள்.
கோவை, முள்ளங்காடு பகுதியில் சிறுவாணி பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள்.

சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு குடிநீா் கொண்டு வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாநகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டா் குடிநீா் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்ததால் ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீா்மட்டம் 871 மீட்டராக உயா்ந்தது. நீா்மட்டம் உயா்வால் அணையில் இருந்து குடிநீருக்காக 9.30 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக கோவையில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், கோவை முள்ளங்காடு வனப் பகுதியில் சிறுவாணி பிரதான குழாயில் திங்கள்கிழமை விரிசல் ஏற்பட்டாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இந்தக் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் அணையில் இருந்து மாநகருக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னா் குழாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், சீரமைப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீா் விநியோகம் வழக்கம்போல் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com