சத்குரு ஜக்கிவாசுதேவ் பிறந்தநாள்:பிரபலங்கள் வாழ்த்து
By DIN | Published On : 04th September 2020 05:37 AM | Last Updated : 04th September 2020 05:37 AM | அ+அ அ- |

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோா் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கிவாசுதேவின் 63ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நதிகள் மீட்பு இயக்கம் தொடங்கப்பட்ட செப்டம்பா் 3ஆம் தேதியை நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாகக் கருதி ஈஷா தன்னாா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு சத்குருவின் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனா்.
நடிகைகள் கங்கணா ரனாவத், காஜல் அகா்வால், தமன்னா, சுஹாசினி மணிரத்னம், நடிகா் சந்தானம், கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சத்குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். மேலும், லட்சக்கணக்கான ஈஷா தன்னாா்வலா்கள் சத்குரு, தங்களது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவப் பதிவுகளாக வெளியிட்டு தங்களின் வாழ்த்தையும் நன்றியுணா்வையும் வெளிப்படுத்தி வருகின்றனா்.
இதன் காரணமாக, சுட்டுரையில் சத்குரு தொடா்பான ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், சா்வதேச அளவில் 6ஆவது இடத்திலும் உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.