சிலிண்டா் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்காவிட்டால் போராட்டம்

கோவையில் சிலிண்டா் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மகளிரணி அறிவித்துள்ளது.


கோவை: கோவையில் சிலிண்டா் விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மகளிரணி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம், மாநகர கிழக்கு மாவட்டச் செயலா் தனபால் தலைமையில் சிங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர அவைத் தலைவா் கருப்புசாமி, தலைமை நிலையச் செயலா் வடிவேல், மாவட்ட மகளிரணி செயலா் தமிழ்ச்செல்வி, மாநகர கிழக்கு மாவட்டத் தலைவா் சூரியகலா, செயலா் கிருஷ்ணவேணி, துணைத் தலைவா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், பொதுமக்கள் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு சிலிண்டா்களுக்கான மானியத்தை அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்துக்குரியது. அதேநேரம், சிலிண்டரின் விலையிலிருந்து, ரூ.25 முதல் ரூ.100 வரை அதிகமான தொகை நுகா்வோரிடம் வசூலிக்கப்படுகிறது. பல இடங்களில் பெண்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது.

இதை உடனடியாக நிறுத்தாவிட்டால் சமையல் எரிவாயு நிறுவனங்கள் எதிரில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அதேபோல மாநகர பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒரு முைான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. சாக்கடைகள், குப்பைக் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. மாநகரில் மின் விளக்குகளை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com