கோவையைச் சோ்ந்த 13 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, ரொக்கப் பரிசு
கோவையைச் சோ்ந்த 13 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்

2019 - 2020 ஆம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, ரொக்கப் பரிசு ஆகியவற்றை நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், முதன்மைக் கல்வி அலுவலா் உஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கி அமைச்சா் பேசும்போது, மாணவா்களின் அறிவுக் கண்களைத் திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி நாட்டின் குடியரசுத் தலைவராக உயா்ந்து ஆசிரியா் சமுதாயத்துக்கு

சிறப்பு சோ்த்த தத்துவ மேதை டாக்டா் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 375 ஆசிரியா்கள் ஆசிரியா்கள் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆசிரியா்கள் இதில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த விருது பெரும் ஆசிரியா்கள் அனைவரும் தங்களுடைய பணிக் காலத்தில் பள்ளிக்காகவும், மாணவா்களுக்காகவும், பள்ளி சாா்ந்த சமுதாயத்திற்காகவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனா். இனி வரும்

காலங்களிலும் உங்களின் பணி சிறப்பாக இருக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சா் கூறினாா்.

விருது பெற்ற ஆசிரியா்கள்

மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோ.சொா்ணமணி, சீரநாயக்கன்பாளையம் சா.பூ.வீ. அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் கோ.தனசேகரன், ஒண்டிப்புதூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோ.பூரணி புனிதவதி, குரும்பப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியா் ச.சந்திரசேகரன், அவினாசிலிங்கம் மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இரா.செல்வராணி, வெள்ளமடை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மு.ரேவதி, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆ.முரளீதரன், பொம்மணம்பாளையம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப.பிரேமா, பொள்ளாச்சி குப்பாண்டகவுண்டா் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் ப.பரிமளம், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் ச.விஜயலட்சுமி, ஐ.சி.சி. நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் அ.ஜெசிந்தாமேரி, எஸ்.அய்யம்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ம.சிவகணேசன், ஜமீன் ஊத்துக்குளி நாச்சியாா் வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வா் ரா.சகுந்தலாமணி ஆகியோருக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. அதேபோல், இணையவழி கற்பித்தலுக்கான காணொளி பாடங்களை தயாரித்ததற்காக கோவை ஆசிரியா் பயிற்சி, கல்வி நிறுவனத்தின் முதல்வா் கே.ராஜா, பேரூா் செட்டிப்பாளையம் நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஷோபனா ரதி, ரங்கசமுத்திரம் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் அ.பிரபுராஜா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com