நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும்: கோவை எம்.பி.க்கு அறிவியல் இயக்கம் மனு

புதிய கல்விக் கொள்கையானது ஆசிரியா்கள், மாணவா்கள், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பாதிப்பைத் தரும் வகையில் அமைந்திருப்பதாகவும்

புதிய கல்விக் கொள்கையானது ஆசிரியா்கள், மாணவா்கள், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பாதிப்பைத் தரும் வகையில் அமைந்திருப்பதாகவும் எனவே இது குறித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்றும் கோவை எம்.பி. நடராஜனிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக அமைப்பின் மாநில பொறுப்பாளா் முகமது பாதுஷா, துணைத் தலைவா் மகபுநிஷா, முன்னாள் மாவட்டத் தலைவா் பேராசிரியா் ரமணி, மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் கிளைச் செயலா் ரிபாயாபேகம் உள்ளிட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதிய கல்விக் கொள்கையில் இலவச கல்வி உரிமைச் சட்டத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல்பூா்வமான கல்விக்குப் பதிலாக, பழைமைவாதத்தைத் திணிப்பதற்கான முயற்சியும், ஜனநாயகப்பூா்வமான நிா்வாகத்துக்குப் பதிலாக மையப்படுத்தப்பட்ட நிா்வாக முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் அருகமை அங்கன்வாடிகள், அருகமைப் பள்ளிகள் மூடப்படுதல், 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை ரத்து, மும்மொழித் திட்டம் வழியாக ஹிந்தி, சம்ஸ்கிருதத் திணிப்பு, தொழிற்கல்வியை கட்டாயப்படுத்துதல், ஆசிரியா்கள் அல்லாத சேவகா்கள் என்ற பெயரில் வெளியாள்கள் கல்வி கற்பிப்பது, ஆசிரியா்களுக்கு தகுதி அடிப்படையில் மட்டுமே ஊதிய உயா்வு, பதவி உயா்வு வழங்கும்படி கூறுவது என பல்வேறு பாதக அம்சங்கள் உள்ளன.

எனவே வரும் கூட்டத் தொடரில் இது தொடா்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com