மத்திய அரசின் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் பால சக்தி, பால கல்யாண் விருதுகளுக்கு தகுதியானவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியா் கு.ராசாமணி


கோவை: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் பால சக்தி, பால கல்யாண் விருதுகளுக்கு தகுதியானவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தேசியக் குழந்தைகள் விருது பால சக்தி, பால கல்யாண் என இரண்டு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. தனித்துவமிக்க செயலாற்றலால் விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு பால சக்தி விருதுக்கான பதக்கம், சான்றிதழ், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

குழந்தைகள் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு அளித்த நிறுவனங்கள், தனி நபா் பிரிவுக்கு பால கல்யாண் விருது வழங்கப்படுகிறது. இதில் தனிநபா் பிரிவில் பதக்கம், சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும், நிறுவனம் பிரிவில் பதக்கம், சான்றிதழுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

இவ்விரண்டு விருதுகளுக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதியானவா்கள் இணையதளத்தில் செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிற வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள், காலம் தாழ்த்தி சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com