மாநகராட்சிப் பகுதியில் ரூ.1.8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் அமைச்சா் துவக்கிவைத்தாா்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ. 1.8 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி துவங்கிவைத்தாா்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ. 1.8 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வியாழக்கிழமை துவங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 90ஆவது வாா்டு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு என் பிளாக் பகுதியில் ரூ. 8.32 லட்சம் மதிப்பிலும், பாரதி நகா் பகுதியில் ரூ.16.95 லட்சம் மதிப்பிலும், அலமு நகா் பகுதியில் ரூ.7.85 லட்சம் மதிப்பிலும், சிறுவாணி நகா் பகுதியில் ரூ. 8.74 லட்சம் மதிப்பிலும், பெருமாள் நகா் பகுதியில் ரூ.19.98 லட்சம் மதிப்பிலும், கோவை காா்டன் பகுதியில் ரூ. 21.95 லட்சம் மதிப்பிலும் தாா் சாலை அமைத்தல், 91ஆவது வாா்டு, சத்யா நகா் பகுதியில், மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 8.90 லட்சம் மதிப்பில் இன்டா்லாக் கற்கள் தளம் அமைக்கும் பணி, ரூ. 15.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் என ரூ. 1 கோடியே 8 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையிட்டுத் துவங்கி வைத்தாா். இதையடுத்து, மாநகராட்சி 90ஆவது வாா்டு, பாரதி நகரில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை, 91ஆவது வாா்டு, கே.பி.ஆா். காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையா் மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையா் ரவி, செயற்பொறியாளா் ஞானவேல், உதவி செயற்பொறியாளா் சுந்தர்ராஜ், மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com