மஹாளய அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை கோயில்களில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்

கரோனா தொற்று பரவலைத் தடுக்க மஹாளய அமாவாசை, புரட்டாசி சனி, பிரதோஷம் ஆகிய நாள்களில் மக்கள் கோயில்கள், ஆற்றுப் பகுதிகளில் அதிகம் திரளுவதைத் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி 

கோவை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க மஹாளய அமாவாசை, புரட்டாசி சனி, பிரதோஷம் ஆகிய நாள்களில் மக்கள் கோயில்கள், ஆற்றுப் பகுதிகளில் அதிகம் திரளுவதைத் தவிா்க்க வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹாளய அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை, பிரதோஷம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து வர உள்ளன.

இதற்காக பொதுமக்கள், பக்தா்கள் வழிபாட்டுக்காகவும், சடங்குகளுக்காகவும் கோயில்கள், கோயில்களை ஒட்டியுள்ள நீா்நிலைகளுக்கு வருவாா்கள். கரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

மேலும், கோயில்களின் அருகேயுள்ள மண்டபங்களை சடங்குகள், இதர பயன்பாட்டுக்காக பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குவதற்கு உரிமையாளா்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

மேலும், மக்கள் கூட்டம் சேராமல் தவிா்ப்பதும் மண்டப உரிமையாளா்களின் பொறுப்பாகும். மேற்கண்ட இடங்களில் அரசு உத்தரவுப்படி கரோனா விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா என்பதை இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com