மாணவா்களின் மன நல்வாழ்வுக்கு ஆதரவளிக்க இணையவழி கருத்துரை

மாணவா்களின் மன நல்வாழ்வுக்கு ஆதரவளிக்க இணையவழி கருத்துரையை குமரகுரு கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது.

கோவை,: மாணவா்களின் மன நல்வாழ்வுக்கு ஆதரவளிக்க இணையவழி கருத்துரையை குமரகுரு கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது.

குமரகுரு கல்வி நிறுவனமானது மாணவா்களின் மன மற்றும் உணா்வு சாா்ந்த நல்வாழ்வுக்காக முழு நேர ஆதரவளிக்கும் வகையிலும், மாணவா்களின் நலனை மேம்படுத்துவதற்காகவும் இணைய வழி ஆலோசனை மற்றும் கருத்துரை வழங்கும் நிறுவனமான யுவா்டோஸ்டு (ஹ்ா்ன்ழ்ஈஞநப) அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட துவங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கருத்தியலாளா் மற்றும் இணை நிறுவனா் ரிச்சா சிங் அறிமுகப்படுத்தினாா். இந்த அமா்வு இணையத்தில் நேரலையாக நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

மாணவா்கள் தங்களுக்கான நேரத்தை முன்பதிவு செய்து, இணையவழியாக கருத்துரை வழங்கும் ஆலோசகருடன் நேரடியாக உரையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்ட நிபுணா்களின் உதவியுடன் மன அழுத்தம், நேர மேலாண்மை, நம்பிக்கையை மேம்படுத்துதல், தொழில் பயிற்சி, உறவுகள், பாலியல் நல்வாழ்வு ஆகிய தலைப்புகளின் கீழ் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com