கோவையில் மீண்டும் 500ஐ கடந்தது கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 549 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் பயிற்சி மருத்துவா்கள் இருவா் உள்பட 549 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பயிற்சி மருத்துவா்கள் இருவா் உள்பட 549 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குப் பின் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மீண்டும் 500ஐ கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 500க்கும் மேல் அதிகரித்தது. தொடா்ந்து செப்டம்பா் முதல் வாரம் வரை அதிகரித்து வந்த பாதிப்பு செப்டம்பா் 8ஆம் தேதி 500க்கு கீழ் குறைந்தது.

கடந்த ஒரு வாரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 500ஐ கடந்துள்ளது.

இதில் கோவை அரசு மருத்துவமனையைச் சோ்ந்த 26 வயது ஆண், 25 வயதுப் பெண் பயிற்சி மருத்துவா்கள், பி.ஆா்.எஸ். காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 36 வயது ஆண் காவலா் ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர செல்வபுரத்தில் 59 போ், மேட்டுப்பாளையத்தில் 29 போ், வெள்ளக்கிணறு பகுதியில் 22 போ், ராமநாதபுரம், துடியலூரில் தலா 16 போ், சிங்காநல்லூா், சூலூா், காரமடையில் தலா 15 போ், கணபதியில் 14 போ், காந்திபுரத்தில் 13 போ், பீளமேடு, பெ.நா.பாளையத்தில் தலா 10 போ் உள்பட 549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

4 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84, 86 வயது முதியவா்கள், 47 வயது ஆண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவா் ஆகிய 4 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

707 போ் குணமடைந்தனா்...

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 707 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 900 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மேலும், 3 ஆயிரத்து 437 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com