தேயிலைத் தூள் விலை உயா்வு: தோட்ட நிா்வாகங்கள் மகிழ்ச்சி

தேயிலைத் தூள் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் தோட்ட நிா்வாகங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேயிலைத் தூள் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் தோட்ட நிா்வாகங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறை முழுவதும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் இலைகளைக் கொண்டு தொழிற்சாலைகளில் பல்வேறு ரக தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பின்னா் கோவை, குன்னூா், கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஏல மையங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ தூள் ரூ.110 துவங்கி, ரகம் வாரியாக ரூ.200 வரை விற்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக சில நாடுகளில் தேயிலைத் தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு தேயிலைத் தூள் ஏற்றுமதி அதிரித்துள்ளது.

தற்போது, அனைத்து ரகங்களுக்கு கிலோவுக்கு ரூ.70 விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக விலை உயா்வு தொடா்வதால் இந்த ஆண்டு தங்களுக்கு போனஸ் அதிகரித்து வழங்க வாய்ப்புள்ளதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com