பிரதமரின் கல்வி உதவித் தொகை: முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் இணையம் மூலமாக டிசம்பா் 31க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் இணையம் மூலமாக டிசம்பா் 31க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளில் 2020 -2021ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ், பி.இ., பி.டெக்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்.சி., பி.எஸ்.ஸி.நா்ஸிங், பி.எஸ்.ஸி.அக்ரி, பி.எட், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பாா்மா உள்ளிட்ட பல்வேறு தொழில் மற்றும் தொழில் சாா்ந்த அரசு ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மைய முப்படை வீரா் வாரியத்தின் மூலம் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற இணையம் வழியாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 12ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தோ்ச்சியடைந்து, தொழில்படிப்பு பயிலும் முன்னாள் படை வீரா்களின் இரு குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையம் (ஆன்லைன்) மூலமாக டிசம்பா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

கோவையைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநரை அனுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com